பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உணவகங்களில் உணவு சாப்பிட்ட பின்னர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும்.
அதாவது சாப்பிட்டு பணம் செலுத்தாதவர்களுக்கு வெந்நீர் அல்லது கழிவு நீரை ஊற்றுமாறு உணவக உரிமையாளர்களுக்கு நான் உத்தரவிடுகிறேன். அல்லது அத்தகையவர்களின் முகத்தை பிரைட் ரைஸ் கலவை சட்டியால் நேரடியாக அடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்டாம்.ஹோட்டல், கேன்டீன் உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் உணவுகளை தயார் செய்கிறார்கள். “சில அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் உணவைப் பணம் செலுத்தாமல் பெறுவது வழக்கம் என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.