சூர்யாவை கல்யாணம் பண்ணதற்கு பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டி இருந்த ஜோதிகா, இரு குழந்தைகளுக்கு தாயானார். பிள்ளைகள் பள்ளி செல்லும் வயது வந்தபின், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். தன்னுடைய சொந்த தயாரிப்பாக 36 வயதினிலே படத்தில் நடித்தார். அதன் பின் இப்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜோதிகா, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் ஒரு பிரபல ஹீரோவும் நடிக்க உள்ளார் என்றார்கள். அது சூர்யா என்று யோசித்தபோது, இல்லயாம். அது ஜி.வி.பிரகாஷாம்.
இந்த படத்தில் ஜோதிகா போலீஸாக நடிக்க இருக்கும் இந்தப்படத்தை பாலாவும் சூர்யாவும் சேர்ந்து தயாரிக்க உள்ளார்கள். இளையராஜா இசையாம்.
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கலையாம் ஜோ. இத வேற சொல்லணுமாக்கும்.? இது கூடவா தெரியாமல் இருப்பாங்க ரசிகர்கள்?