நாட்டின் மீதான நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை திருப்பிச் செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கோர்ப்பரேஷன் (இசிஜிசி) லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில்நாதன் இதனை தெரிவித்துள்ளார்.
ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அதன் மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை, இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு 7.1 பில்லியன் டொலர்களை கடன்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் அவகாசம்
இதன்படி 3 பில்லியன் டொலர்களை சீனாவிற்கும், 2.4 பில்லியன் டொலர்களை பாரிஸ் கிளப்பிற்கும் மற்றும் 1.6 பில்லியன் டொலர்களை இந்தியாவுக்கும் செலுத்தவேண்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அந்த மறுசீரமைப்பு தொகுப்பு வந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பாக 3-4 ஆண்டுகளில் இலங்கையிடம் இருந்து பெற வேண்டிய கடனை 10-12 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று செந்தில்நாதன் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியா இதற்கு முன்னர் இலங்கைக்கான 1 பில்லியன் டொலர் கடனை ஒரு வருடத்திற்கு நீடித்திருந்தது.