இன்னும் இரண்டு நாட்களில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா. இப்போது நாமினியில் இருப்பவர்களுக்கு, விழா அரங்கில் தான் ‘விருது இருக்கா? இல்லையா?’ன்னு தெரியும்.
இங்க விருதுகள் போல,’ உங்களுக்குத்தாங்க விருது, கண்டிப்பா வந்துடுங்க’ என்ற போங்கு ஆட்டம் எல்லாம் அங்க கிடையாதுன்னு நாம நம்பித்தான் ஆகோணும். ஏன்னா, அது வெள்ளைக்காரன் நடத்தறது இல்லையா?! வெள்ளையா இருக்கிறவன் என்னைக்கு பொய் சொல்லி இருக்கான்?!
சரி, சூர்யாவோட சிங்கம் ஆஸ்கர் விருது போட்டியில் இருக்கா? நம்பவே முடியலையே என்பவர்களுக்கு, லயன் தான் ரேஸில் இருக்கு. ஆனா, அது ஹாலிவுட் சிங்கம் ‘லயன்’ படம்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடிச்சாரே ஒரு ஒல்லிபெல்லி ஹீரோ தேவ் பட்டேல், அவர்தான் லயன் படத்தின் ஹீரோ. இயக்குனர் கார்த் டேவிஸ் தேவ் கடுமையாக உழைத்துள்ளார்ன்னு சொல்லி பார்ட்டி இருக்காரு.
இந்த படம் ஒரு நாவலின் திரை உருவாக்கம்.ஒரு உண்மையான சம்பவம். மத்திய பிரதேசத்தில் ஷெரு முன்ஷி கான் என்பவர் தனக்கு 5 வயதாக இருக்கும்போது,தன் அண்ணனை தேடி ரயிலில் ஏறிவிட்டார்.
5 வயது பிள்ளைக்கு என்ன தெரியும்? ரயில் கல்கத்தாவுக்கு போனது. அங்கே சிறுவர் இல்லத்தில் இருந்தஅந்த பிள்ளையை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சூ- ஜான் பிரையர்லி தம்பதி தத்தெடுக்க, ஆஸ்திரேலியாவில்சாரு பிரையர்லி யாக வளர்கிறார். இளைஞரான பிறகு, கூகுள் எர்த் மூலம் தன் குடும்பத்தை கண்டுபிடிக்கிறார் ஷெரு முன்ஷி கான். இது நாவலாக வெளிவந்தது. அதுவே லயன் என்ற பெயரில் படமாகி உள்ளது.
ஒரு இந்தியரை பற்றிய படம் ரேஸில் இருப்பது நமக்கும் மகிழ்ச்சிதானே.