Loading...
ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு கடந்த முதலாம் ஆம் திகதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஜூலை முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்த அமர்நாத் யாத்திரை வானிலை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Loading...
வானிலை சீரடைந்த பின்னர் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 84 ஆயிரத்து 768 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...