ரஜினி பட தலைப்புகளும், ரஜினி பட பாடல்களும், பன்ச் வசனங்களும் தான் இப்போ வரும் படங்களின் டைட்டில்களாகி வருகின்றன. ‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’ , ‘கதம் கதம்’ ,’ போடா ஆண்டவனே நம்ம பக்கம் ‘, வேலைக்காரன் என்று ஏகப்பட்ட டைட்டில்கள் வந்துவிட்டன.
அந்த வழியில், ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி பேசிய பன்ச் வசனம் ‘கெட்ட பையன் சார் இவன்’ . அந்த வசனத்தையும் விட்டுவைக்காமல் ‘சதுரங்க வேட்டை’ நட்டி நடிக்கும் படத்திற்கு வைத்துவிட்டார்கள்.
‘ பயணங்கள் முடிவதில்லை’ , ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ராஜாதி ராஜா’ போன்ற வெற்றி பாடங்களை இயக்கிய ஆர். சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் தான் இயக்கம்.
இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யின் அசிஸ்டண்டாக இருந்தவர்.ஏ.ஆர் ரஹ்மானின் தங்கை மகன் ஏ.எச். காஷிஃப் தான் இசை.