அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் எனவும் சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேன்முறையீடுகள்
மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இதுவரை 08 இலட்சம் மேற்முறையீடுகளும் 10,000-இற்கும் அதிக எதிர்ப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், இம்மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.