முல்லைத்தீவு அளம்பில் பகுதியில், தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன.
அளம்பில் பகுதியில் நேற்றையதினம்(08.07.2023) காணியொன்றின் மலசல குழியினை துப்பரவு செய்யும்போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழியினை பார்வையிட்டு அடையாளப்படுத்திய பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைக்குண்டுகள் மற்றும் எறிகணை
மேலும, சம்பவம் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கை இடம்பெறும் என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இனங்காணப்பட்ட வெடிபொருட்களில் கைக்குண்டுகள் மற்றும் எறிகணை வகை வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.