சின்னத்திரை நடிகர்களான லதாராவ்-ராஜ்கமல் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல சின்னத்திரை நடிகை லதாராவ். இவரது கணவர் ராஜ்கமலும் சின்னத்திரை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்களுக்கு மதுரவாயல், கிருஷ்ணா நகர், 15-வது தெருவில் பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டை அவர்கள் சினிமா மற்றும் டி.வி. படப்பிடிப்புக்கு வாடகைக்கு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பூட்டி கிடந்த அந்த பங்களா வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதுபற்றி நடிகை லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி.யை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பிரமுகர் பொன்.பிரபாகரன் என்பவரது வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த காரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.