Loading...
வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. சமயபுரம் மாரியம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும். * மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
திருமணத்தடை உள்ளவர்களுக்கு, தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.
Loading...
- காஞ்சி காமாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் தீராத கஷ்டங்கள் கூட விரைவாக ஒரு தீர்வுக்கு வந்துவிடும்.
- இருக்கன்குடி மாரியம்மனை விரதம் இருந்து வழிபட்டால் உடல் உபாதைகள் தீரும்.
குறிப்பாக வயிற்று வலி, கை, கால் வலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.
- அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் புனிதநீரில் நீராடி பின்பு அம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
- வெக்காளி அம்மனை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டால் நல்ல பலன் உண்டு.
- வாராஹி அம்மனை விரதம் இருந்து பஞ்சமி திதியில் விரலி மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.
Loading...