பொதுவாக பெண்களுக்கு வரும் பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த தலைமுடி பிரச்சினை.
இது வயதிற்கு வந்தவர்கள் முதல் வயதானவர்களை வரை சென்று பாதிக்கின்றது.
இந்த அப்படி என்ன தான் தீர்வு, என சிந்தித்து கொண்டிருக்கும் போது தான் ஒன்று நினைவிற்கு வருகின்றது.
“கறிவேப்பிலை” இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் கொத்து கொத்தாக கொட்டும் தலைமுடியை கட்டுபடுத்தி காடு போல் வளர வைக்கின்றது.
தலைமுடி பிரச்சினை அதிகமாகும் போது, உளைச்சலை ஏற்படுத்துவதோடு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளுக்கும் கூட வழிவகுக்கும்.
அந்த வகையில் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் கறிவேப்பிலை வைத்தியம் எப்படி செய்ய வேண்டும் என்பதனை தெரிந்துக் கொள்வோம்.
கறிவேப்பிலை முடி எண்ணெய்
தேவையான பொருட்கள்
புதிய கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
தயிர் – 1 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை
மேற்கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பேஸ்ட் போன்று கலந்து அதன் பின்னர் மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அந்த கலவையில் தேன், தயிர் கலந்திருப்பதால் கெட்டியாக இருக்கும். அதனை ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியின் வேர்களில் இருந்து நுனி வரை நன்றாக தடவ வேண்டும்.
சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் வெதுப்பான நீரினால் தலையை கழுவி விட வேண்டும்.
வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும். ஏதாவது அழற்சிகள் தோன்றினால் மருத்துவரின் ஆலோசனையுடன் தடவ வேண்டும்.