பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து சவூதி அரேபிய நாட்டுக்கு கடந்த மாதம் 20-ம் திகதி போயிங் ரக பயணிகள் விமானமானது சென்றுள்ளது. மொத்தம் 409 பயணிகள் மட்டுமே பயணம் செய்யும் வசதியுடைய இந்த விமானத்தில் 416 பயணிகள் விதிமுறைகளை மீறி பயணம் செய்துள்ளனர். அதாவது 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்துள்ளனர்.
சர்வதேச விமானப் பயணங்களுக்கான விதிமுறைகளை பின்பற்றாமல் அந்த 7 பேருக்கும் கையால் எழுதப்பட்ட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நேற்று சவூதி அரேபியாவில் உள்ள ஒரு செய்தித் தாளில் வெளியாகியது.
இதனையடுத்து பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, உரிய அனுமதி இல்லாமல் பயணிகளை விமானத்தில் பயணம் செய்ய வைத்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த விமானத்தை ஓட்டிய பைலட் கூறியதாவது ,” கராச்சியிலிருந்து விமானம் கிளம்பியதும் எனது அறையை விட்டு வெளியே வந்து பார்த்தேன். அப்போது கூடுதலாக பயணம் செய்தது தொடர்பாக விமான நிறுவனத்திடம் கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.