ரெட்மி 12 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி 12 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதற்காக சியோமி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசரில், ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 01-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் முதல் டீசரில், அந்நிறுவன விளம்பர தூதர் திஷா படானி தனது கையில் மொபைல் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த பிளாக்ஷிப் டிசைன் அனைவருக்குமானது என்று சியோமி தெரிவித்து இருக்கிறது.
டீசரில் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்திய சந்தையில் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அடுத்த மாத வெளியீட்டை தொடர்ந்து, ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்கள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.