Loading...
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான காசி திரையரங்கத்தை புதுப்பிக்க இருக்கிறார்களாம். கடைசியாக இந்த திரையரங்கில் வெளியான படம் சூர்யாவின் சிங்கம் 3 தான்.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் கூறும்போது, எங்களது திரையரங்கை புதுப்பிக்க இருக்கிறோம். புத்தம் புதிதாக சேர்கள், உள்புற அலங்காரம் என நிறைய மாற்ற இருக்கிறோம். அதோடு புதிதாக உணவகம் என புதுப்பிக்க இருக்கிறோம்.
Loading...
திரையரங்கம் முழுவதுமாக தயாராக 1 மாதம் கூட ஆகலாம். எல்லா வேலைகளையும் முடித்து அஜித்தின் விவேகம் படத்தோடு எங்கள் திரையரங்கை மீண்டும் ஒருமுறை திறக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
Loading...