Loading...
இந்தியாவின் வட மாநிலங்களில் பருவமழை பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், இராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் கனமழை பெய்யது வருகின்றது.
Loading...
நேற்று முன்தினம் முதல் லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் கனமழையால், 450 ஆண்டுகால கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. வேறு சில வீடுகளும் பாதிப்படைந்துள்ளன.
இந்த நிலையில், வடமாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...