வடக்கில் கணவனை இழந்த பெண்கள் இராணுவத்தினராலும் அதிகாரிகளாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளியிட்ட கருத்துக்கு சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் கருத்து என்ற வகையில் மாத்திரமன்றி தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவர் என்ற வகையிலும் அவர் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்ததால் கூடுதல் முக்கியளத்துவம் கிடைத்திருந்தது.
வடக்கிலுள்ள கணவனை இழந்த பெண்கள் தன்னிடம் அளித்த முறைப்பாடுகளை முன்வைத்தே அவர் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
சந்திரிகா குமாரதுங்கவின் இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்பு மட்டத்தில் பலத்த சர்ச்சைகளையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இராணுவத்தின் ஒரு தரப்பினருக்கு கடுமையான அதிருப்திகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் தான் நல்லிணக்க பொறிஜமுறைக்கான கலந்தாய்வு செயலணியை கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நியமித்த போது பலாலி படைத்தளத்தில் நடந்த இராணுவ அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தில் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முரண்பட்டிருந்தார்.
இதேபோல பல சம்பவங்கள் இராணுவத்துக்குள் அவ்வப்போது நடந்து வருகின்ற போதிலும் அவை பெரும்பாலும் வெளிச்சத்துக்குஎ வருவதில்லை.
இந்த நிலையில் தான் இராணுவ உயர்“மட்டத்தில் சந்திரிகாவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து இராணுவத் தலைமையகத்“தின் ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர்ட ரொஷான் செனிவிரத்ன ஓர் அறிக்கை வௌனியிட்டிருந்தார்.
சந்திரிகா குமாரதுங்கவின் அறிக்கையை நிராகரிக்கும் வகையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. எனினும் தேசிய ஒற்றுமைக்கான நல்லிணக்க பணியகத் தலைமையின் அறிக்கையை நிராகரிப்பதாக மட்டும் அதில் கூறப்பட்டிருந்த அதேவேளை சந்திரிகா குமாரதுங்கவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
அந்த அறிக்கையில் 2010ம் ஆண்டிலேயே இராணுவத்தினர் சிவில் நிர்“வலாகப் பணிகளில் இருந்து விலக்கப்பட்டு விட்டதாகவும் இராணுவம் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் கூறப்பட்டிருந்தது.
பாலியல் குற்றங்கள் தொடர்பான விடயத்தில் இராணுவம் சகிப்புத் தன்மையற்ற கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் 1971ல் பிரேமாவதி மன்னம்பேரி 1996ல் கிருஷாந்தி குமாரசாமி, ரஜினி வேலாயுதபிள்ளை வடக்குகளில் சிவில் நீதிமன்றங்களின் விசாரணைக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பையும் வழங்கியது என்றும் அந்த அறிக்கையில் தெலிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் வடக்கில் பெண்களுக்கு எதிரான அனைத்து துன்புறுத்தல்களுக்கும் இராணுவம் காரணம் என்று சந்திரிகாடி குமாரதுங்க எங்கேயும் கூறியிருக்கவில்லை என்று கூறியுள்ளது.
இமராணுவத்தினரும் ஒரு காரணம் என்று சந்திரிகா கூறிய கருத்து இங்கு மறுக்கப்படவில்லை. இராணுவத்தினரே முழுக் காரணம் என்ற கருத்தே அவரது தரப்பில் மறுக்“கப்பட்டுள்ளது.
அதேவேளை சந்திரிகாவின் குற்றச்“சாட்டின் அடிப்படைத் தன்மைக்கும் இராணுவத் தலைமையகத்தின் மறுப்பு அறிக்கையின் தன்மைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
வடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதன் ஒரு விளைவு தான் இத்தகைய பாலியல் கொடுமைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சாதகமான ஒரு காரணியாக இருக்கிறது. இதனை சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக சுட்டிக்காட்டி இருக்கவில்லை. ஆனால் உண்மைநிலை அதனைச் சார்ந்த விடயமாகவே இருக்கிறது.
வடக்கில் அதிகளவு நிறுத்தப்பட்டிருந்“த இராணுவத்தினர் கணவனை இழந்த பெண்களுக்கு மாத்திரமன்றி ஏனைய பெண்களின் பாதுகாப்புக்கும் கூட அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர். உதாரணமாக கிளிநொச்சியில் ஒரு வீட்டில் அடிக்கடி தங்கிச்சென்ற ஒரு இராணுவ அதிகாரியினால் அந்த வீட்டில் உள்டள இளம்பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி அண்மையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு இராணுவ உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இது போன்றங பாலியல் அத்துமீறல்களுக்கு பொதுமக்களின் வாழ்விடங்களை அண்டி படையினர் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளமை முக்கிய காரணமாகவுள்ளது.
இதனை சந்திரிகா குமாரதுங்க வெளிப்படுத்தவுமில்லை. இராணுவத் தலைமையகம் இதுபற்றி வாய் திறக்கவுமில்லை. இராணுவத் தலைமையக அறிகப்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சம்பவங்களில் நீதி நிலைநாட்டப்படுவதற்கு இராணுவம் ஒத“்துழைத்தது பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் அதற்கு அப்பால் இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுப்பதற்கு சட்டமைப்பு ரீதியாக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற எந்த விளக்கத்தையும் காண முடியவில்லை. சம்பவங்களுக்கு பிந்திய விசாரணைகளுக்கு உதவுதல் மாத்திரம் பெகாறுப்பு வாயந்த செயலல்ல. சம்பவங்களைத் தடுப்“பதற்கான நடவடிக்கையே முக்கியமானது.
கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் அண்மைய ஆண்டுகளில் படையினர் மத்தியில் பாலியல் நோயத்தொற்று தொடர்பான அதிகளவு விழிப்பூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தது. இது ஏன் என்ற ஒரு கேள்வி பரவலாகவே காணப்பட்டது.
படையினரின் பாலியல் ஒழுக்க மீறல்களை உயர்மட்டம் அறிந்திருந்தே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டிருந்தன.
பொதுவாகவே இராணுவத்திஜல்ட பாலியல் ஒழுக்க மீறல்கள் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம். இலங்கை இராணுவம் கடந்த காலங்களில் மஅத்தகைய மீறல்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அதிகளவில் எதிர்கொண்டு வந்திஜருக்கிறது.
இராணுவத் தலைமையகத்தின் மறுப்பு அறெிக்கை வௌனியான நாளன்று ஊடகங்களில் மற்றொரு செய்தி வெளியாகி இருந்தது. பயிற்சி ஒன்றுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அனுப்பப்பட்ட முனந்னாள் இராணுவ மேஜர் ஒருவர் அமெரிக்காவில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்ததால் நாடு கடத்தப்பட்டுள்ளார் என்பதே அந்தச் செய்தி.
குறித்த அதிகாரி இராணுவத்தில் தற்போது இல்லாவிடினும் இலங்கை இராணுவம் முற்றிலும் ஒழுக்க சீலங்களைக் கொண்டது என்ற பதத்தை பலவீனப்படுத்துவதற்கு பேபாதுமானதாக இருக்கிறது.
இராணுவத்தை விட்டு வெளியேறி வெளிநாடு ஒன்றில் இத்தகைய அத்துமீறல்களை புரிந்திருக்கக் கூடிய ஓர் அதிகாரி இராணுவத்தில் இருந்தபோது எத்தகைய நிலையில் இருந்திருப்பார் என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது இங்கு அவசியமாகின்றது.
போர்க்காலத்தில் இராணுவம் என்பது உயர் அதிகாரங்களைக் கொண்டதாகவே இருந்தது. யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை. இப்படியான நிலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய அதிகாரிகளும் படையினரும் அத்துமீறல்களை நிகழ்த்தியிருப்“பதற்கு வாயப்புகள்“ அதிகம.
போரின் போதும், போருக்குப் பின்னரும் வடக்கில் அதிகளவு பாலியல் குற்றங்களில் படையினர் தொடர்பு பட்டிருந்தனர் என்பது தெரியாத விடயமல்ல.
இவற்றில் 2010ல் நடந்த விஷ்வமடு கூட்டுப் பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் நான்கு படையினர் தண்டிக்கப்பட்டமை தவிர மற்றைய சம்பவங்களில் பெரும்பாலும் நீதி நிலைநாட்டப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்களும் குடும்பத்தினரும் இத்தகைய சம்பவங்களை வெளியே சொல்வதற்கு அச்சம் கொண்டிருக்கின்றனர்.
இராணுவம் மற்றும் அரச அதிகாரம் தம்மீது பிரயோகிக்கப்படுமொ என்ற அச்சம் மாத்திரமன்றி சமூக அந்தஸ்து பற்றிய அச்சமும் அவர்களின் தயக்கத்துக்கு முக்கிய காரணம்.
இது குற்றங்களில் ஈடுபடும் படையினருக்கு மிகவும் வசதியாகி விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
சந்திரிகா குமாரதுங்கவின் குற்றச்சாட்டை இராணுவத் தலைமையகம் மறுத்துள்ள நிலையில் தான் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவதற்கான ஐநா குழுவின் கூட்டத்தொடரில் தென்னாபிரிக்காவின் மனிதவுரிமை சட்ட நிபுணரான ஜஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உணமை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேரின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சம்ர்ப்பித்திருக்கிறது.
இவர்களில் லெப்.கேர்ணல் மற்றும் மேஜர் தர அதிகாரிகள் அடங்கியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட 55 பெண்களின் சாட்சியங்களை உள்“ளடக்கியதாக இந்த அறிக்கை தயரிக்கப்பட்டுள்ளது.
இதில் 48 பேர் முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் ஏழு பேர் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.
கடைசிச் சம்பவம் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையளில் ஆறு இராணுவ அதிகாரிகளின் ஒளிப்படங்கள் இணைக்“கப்பட்டுமுள்ளன. அவர்களில் ஒருவர் அண்மையில் ஐநா அமைதிப்படையில் பணியாற்ற அனுப்பப்பட்டவர் என்ற தகவலையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கைப் படையினரை தெரிவு செய்வதற்கான ஆய்வை மேற்கொள்ள பல அடுக்குப்“ பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இத்தகைய குற்றச“்சாட்“டு எழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஏனென்றால் இந்த ஆய்வுப் பொறிமுறையில் இறுதிக்கட்டத்தில் ஐநா மனிதவுரிமை பேரவை ஆணையாளர் பணியகமும் பங்கேற்கிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இலங்கை இராணுவத்துக்கு பலத்த சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தக குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் தப்பிக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்ற நிலையில் இராணுவத்தினர் மீது எழுந்திருக்கின்ற இந்தப் பாலியல் குற்றச்சாட்டு அவ்வளவாக உதாசீனப்படுத்த முடியாது.
ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் வாயப்புகளை இது பாதிக்கக்கூடும்.
அரசாங்கத்தைப் பொறுத்டதவரையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதில் கவனம் செலுத்டதுவதை விட இதுபோன்ற சம்பவங்களை தடுபப்பதற்கான கட்டமைப்பை, சூழலை உருவாக்கிக் கொள்வதுதான புத்திசாலித்தனமானது.
குறிப்பாக வடக்கு கிழக்கில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கி அல்லது குறைத்து இத்தகைய குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கொள்ளும் வாயப்பு இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கமோ இராணுவமோ முன்வருமா?