ஒன்ஸ்ஜபேர் (துனிசியா) 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிவிட்டோவாவை (செக்குடியரசு) தோற்கடித்தார். ஷபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட் ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட் ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் ஒன்ஸ்ஜபேர் (துனிசியா) 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிவிட்டோவாவை (செக்குடியரசு) தோற்கடித்தார். ரைபகினா (கஜகஸ் தான்), மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.