மெட்வெதேவ் முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேற்றம் ஜோகோவிச் 3-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஒரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபேங்க்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் தரம் நிலை பெறாத கிறிஸ்டோபர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிட்சிபாஸும் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிறிஸ்டோபர் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார. 3-வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 4-வது செட்டை கிறிஸ்டோபர் 6-4 எனக்கைப்பற்ற போட்டி 2-2 என சமநிலை பெற்றது.
வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டிலும் கிறிஸ்டோபர் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் சிட்சிபாஸ் 2-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் 7(8)-6(6),7(8)-6(6), 5-7, 6-4 என ஹுபர்ட் ஹர்காஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். முதல் நிலை வீரர் அல்காரஸ் கார்பியா 3-6, 6-3, 6-3, 6-3 என பெரேட்டினியை வீழ்த்தினார்.
21-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 6-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே வீழ்த்தினார். 3-ம் நிலை வீரர் மெட்வெதேவ் 6-4, 6-2 என முன்னிலையில் இருந்தபோது, எதிர் வீரர் காயத்தால் வெளியேறியதால், மெட்வெதேவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.