Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகிக்கொள்ள விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இனவாதிகள் இல்லாத, ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட அணிகளுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகிக்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி அண்மையில் அறிவித்திருந்தது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் உடன்படிக்கையின் மூலம் கூட்டணியில் இணைந்து கொண்ட கட்சியல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...