Loading...
நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது. 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
Loading...
இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா ஜோடி 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...