யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றது.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நடாத்தப்படும் இத் தேர்தலில் 5 பேர் போட்டியிடுகின்றார்கள்.
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி, மற்றும் பேராசிரியர் சிறிசற்குணராஜா, பேராசிரியர் மிகுந்தன், பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரவிராஜ் உள்ளிட்டவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.
குறித்த 5 பேரில் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 3 பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், ஒருவர் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படுவார்.
வாக்குகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படலாம் அல்லது, சேவைகளின் அடிப்படையிலும், ஜனாதிபதி விரும்பிய ஒருவரை துணை வேந்தராக நியமிப்பதற்கான உரிமை ஜனாதிபதிக்கு உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.