Loading...
ரஜினிக்கும், லதாவுக்கு திருமணமாகி இன்றோடு 36 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மணவிழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் இன்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டருகே கூடி, அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Loading...
அப்போது ரஜினி ரசிகர்களில் ஒருவர் ரஜினியின் சிலை ஒன்றையும் அவர்களுக்கு பரிசாக அளிக்க கொண்டு வந்திருந்தார். ‘படையப்பா’ ரஜினி ஸ்டைலில் அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. ரஜினியின் பிறந்தநாள், அவரது மண நாளை ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
Loading...