உக்ரைனில் போர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நடைபெறும் என்று தான் நினைக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செய்தி மாநாடொன்றில், உக்ரைனை உடனடியாக நேட்டோவில் சேர அனுமதிப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மேலும் கூறுகையில், ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனில் நடந்த போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை. அவர் ஏற்கனவே அந்த போரில் தோற்றுவிட்டார்.
எதிர் தாக்குதலில் முன்னேற்றம்
ரஷ்யா தனது வளங்களை நீண்ட காலமாக பராமரிக்க முடியாததால், பல ஆண்டுகளாக போர் தொடரும் என்று நான் நினைக்கவில்லை என பைடன் கூறியுள்ளார்.
மேலும் புடின் இறுதியில் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ விருப்பம் இல்லை என்று முடிவு செய்வார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உக்ரைன் அதன் தற்போதைய எதிர் தாக்குதலில் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.