நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக ரஞ்சித் மத்தும பண்டார உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, அண்மையில் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொதுப் பிரதிநிதிகளை மீள அழைக்கும் அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கும் வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்புக்கு முரணானது
எனினும் குறித்த உள்ளூராட்சி மன்றங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டமூலத்தினால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொது பிரதிநிதிகளை மீள அழைக்கும் அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.