Loading...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
இதேவேளை மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனுத்தாக்கல் செய்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Loading...