Loading...
கடுகண்ணாவை பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
மலை ஏறச் செல்வதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பாத நிலையில், விடுதி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் தேடுதல் பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...