உங்களுக்கு இந்த பரிகார குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம். பெரியவர்கள் நமக்காக நல்லதாக ஒரு சில விஷயங்களை சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நல்லது என்று நமக்காக சொல்லப்பட்ட பரிகாரங்களை ஆராய்ச்சி செய்யாமல், அனுபவப்பூர்வமாக பின்பற்றி, அதன் மூலம் வரக்கூடிய பலனை பெறுவதே புத்திசாலித்தனம். இப்படி செய்தால் நல்லது நடந்து விடுமா? இப்படி செய்தால் கோடீஸ்வரர் ஆகி விடுவோமா? என்ற எண்ணத்தோடு பரிகாரத்தை செய்யாதீர்கள். இந்த பரிகாரம் செய்தால் நிச்சயம் நமக்கு நன்மை நடக்கும் என்ற நோக்கத்தோடு எவரொருவர் பரிகாரத்தை செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயம் நன்மை மட்டும்தான் நடக்கும்.
அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாகன விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வாகனங்களில் பயணிக்கும்போது ஒரு சிறிய காகிதப்பூ உங்களோடு எடுத்து சென்றால் விபத்துகள் ஏற்படாது.
தங்க நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், நிறைய பணம் உள்ளது போன்ற படத்தை காலையில் எழுந்ததும் முதலில் நாம் பார்த்தால் நமக்கு நிறைய பணம் சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டைச் சுற்றி நீரோட்டம் இருப்பது போல இயற்கையாகவே இருந்தால் அது நமக்கு பழக்கத்தை அதிகமாக தரும். இயற்கையான நீரோட்டம் இல்லை என்றால் செயற்கையான நீரோட்டத்தை நாமே உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். தூங்கும் போது எப்போதுமே இடது கை கீழே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆயுள் நீடிக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் சிறு குழந்தை இரவு தூங்காமல் அழுது கொண்டே இருக்கிறதா. நள்ளிரவில் தூக்கத்தில் திடீரென எழுந்து பயந்து அழுகிறதா. தூங்குகின்ற குழந்தைக்கு பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் கல் உப்பை கரைத்து வையுங்கள். குழந்தை நிம்மதியாக தூங்கும்.
தினமும் தூபம் போடும்போது சந்தனப் பொடியை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்திருக்கும் குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தினம்தோறும் அகில் பட்டை பொடியை சேர்த்து தூபம் போட வேண்டும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வீட்டில் தடைப்பட்டிருக்கும் சுபநிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றால், தூபத்தில் துளசி விதைகளை போட வேண்டும். தூதுவளை பொடியைத் தூபத்தில் போட்டு அந்தப் புகையை வீடு முழுவதும் காண்பிக்க உங்களுடைய குல தெய்வம், உங்கள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை. தூதுவளைக்கு இறைவனுக்கே தூது செல்லக் கூடிய சக்தி உண்டாம்.