Loading...
கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நடுவே விக்ரமை வைத்து ’துருவ நட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கவுதம் மேனன்.
அந்த வரிசையில், அரவிந்த்சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கவிருக்கும் ‘நரகாசுரன்’ என்ற படத்தை கவுதம் மேனன் தயாரிப்பதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன்னுடைய பக்கம் ஈர்த்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார்.
Loading...
அரவிந்த்சாமி தற்போது ‘சதுரங்க வேட்டை-2’, ‘வணங்காமுடி’, மலையாளத்தில் வெற்றிகண்ட ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ பட ரீமேக் ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. இப்படங்களின் ஊடே ‘நரகாசுரன்’ படத்திலும் நடித்து முடிக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Loading...