“ரஷ்யாவில் தனியார் இராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லை, எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை ” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புடினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்திருந்தது.
வாக்னர் குழு
போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்தக் கூலிப்படை முக்கிய பங்காற்றியுள்ளது.
இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி காட்டியது, புடினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.
இருந்த போதிலும் கூலிப்படையுடன் புடின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்தப் புரட்சி ஒரு சில நாட்களிலேயே முடிவுக்கு வந்து விட்டது.
புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.