வாக்னர் வாகனபடையினர் தற்போது ரஷ்யாவிலிருந்து அண்டை நாடான பெலாரஸ் வந்துள்ளனர் என்பதை உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பெலாரஸில் எத்தனை “வாக்னர் படையினர்” உள்ளனர், அவர்களின் சரியான இடம் மற்றும் இலக்குகள் ஆகியவற்றை மதிப்பிடுவதாக உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
60 வாக்னர் வாகனங்கள்
சனிக்கிழமை அதிகாலையில் 60 வாக்னர் வாகனங்கள் எல்லையில் பெலாரஸ் நோக்கிச் சென்றதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கை ஒன்று கூறியது.
உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை செய்தித் தொடர்பாளர் Andriy Demchenko சனிக்கிழமையன்று ஒரு குறுகிய அறிக்கையில் பெலாரஸில் வாக்னர் படை இருப்பதை உறுதிப்படுத்தினார். உக்ரைனிய எல்லைக் காவலர்கள் நாட்டின் வடக்கு எல்லை முழுவதும் “நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று அவர் கூறினார். அவர் கூடுதல் விபரங்களை வழங்கவில்லை.