Loading...
கொழும்பில் இயங்கி வந்த போலி புனர்வாழ்வு மையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் தெஹிவளையில் நடாத்தப்பட்டு வந்த புனர்வாழ்வு மையம் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 34 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Loading...
இந்த நிலையத்தை நடத்திச்சென்ற சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவுளை, போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றுக்கொள்வதற்காக நிலையத்தில் தங்கியிருந்தவர்கள், அவர்களது பாதுகாப்பு நிமித்தம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Loading...