Loading...
தெமோதர பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானமைக்கு சாரதியின் கவனக்குறைவே காரணம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விபத்தில் 21 பேர் காயமடைந்து 11 ஆண்களும், 9 பெண்களும் என பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் ஏறக்குறைய 30 பேர் பயணித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
Loading...