தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பல படங்களில் நடித்து உலக அளவில் மிக முக்கிய சாதனை படைத்தவர்.
கடந்து வந்த பாதையில் வெற்றிகளும் தோல்விகளும் ஏராளம். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது 36வது திருமண நாளை கொண்டாடுகிறார்.
1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி லதா, ரஜினி தம்பதியின் திருமணம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது. பார்த்தவுடனே காதல் இவர்களுக்குள்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியுடைய சகோதரியான லதா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது பாடம் சம்பந்தமாக ரஜினியை பேட்டி எடுக்க வேண்டும் என ஒய்.ஜியிடம் கேட்டுள்ளார்.
அவரும் ரஜினியிடம் விஷயத்தை சொல்லி படப்பிடிப்பு தளத்திற்கு லதாவை வரவழைத்திருக்கிறார். பேட்டி முடிந்ததும் ரஜினி அதே நினைவுகளில் சில நாட்களாக மூழ்கியுள்ளார்.
பின் அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என தன் நண்பர் ஒய்.ஜியிடம் தன் விருப்பத்தை தெறிவிக்க, குடும்பத்தாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது.
இன்று ரஜினி ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா என மகள்கள், பேரப்பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறார்.