யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்.வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதான புஸ்பராசா எழில்நாத் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறப்படுகின்றது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.