நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களைக் கண்டறிய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவுக்குப் பதிலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாற்றுக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் செயற்பாட்டிற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நல்லெண்ணத்துடன் பங்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில், நாட்டின் நிதி வங்குரோத்து நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளிள் முடிவு
இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த குழுவிலிருந்து விலக முடிவு செய்தன.
இவ்வாறானதொரு பின்னணியில், போலி குழுவிற்கு பதிலாக, எதிரணியினரால் உண்மையான மாற்றுக் குழு அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.