Loading...
களனி கேஜ் அம்குகம பிரதேசத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று (16.07.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எனைய இரண்டு இளைஞர்களும் தனது மற்றைய நண்பர் காணாமல் போனதை அறிந்து ஹன்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Loading...
மேலதிக விசாரணை
குறித்த முறைபாட்டுக்கு அமைய விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், களனியில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...