யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம் மாணவர்கள் பிடிபடும் போது மாணவனும், மாணவி ஒருவரும் முழு நிர்வாண நிலையிலும் மற்றைய மாணவி அரைகுறையான ஆடைகளுடனும் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் கொக்குவில் பகுதியில் இச்சம்பவம் நேற்று மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பலரும் தங்கிச் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
அத்தோடு அவ் வீடு அனுமதி பெறப்படாத விடுதி போல் செயற்பட்டு வந்துள்ளது. வீட்டு உரிமையாளர் வீட்டினை நாள் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். வவுனியாவில் குடும்பமாக வசிக்கும் வீட்டு உரிமையாளருக்கு அயலில் வசிப்பவர்கள் அங்கு வந்து தங்குபவர்கள் தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடுகளை கூறியும் அவர் அதனைக் கருத்தில் எடுக்காது நாள் வாடகைக்கு வீட்டினை வழங்கி வந்துள்ளார்.
அங்கு ஜோடிகளாக வந்து தங்கிச் செல்வோர் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்னர்.
இரு யுவதிகள் நேற்று காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து பூட்டியிருந்த வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றதை அடுத்து இளைஞன் ஒருவனும் உள்ளே சென்றதை அயலில் வசிப்பவர்கள் அவதானித்துள்ளார்கள்.
அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரச அதிகாரி தலைமையில் வயதானவர்களான பெண்கள் சிலரும் வயோதிபர்கள் சிலரும் 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்தனர். இதன் போதே அவர்கள் மூவரும் நிர்வாணமாக இருந்த நிலையில் பிடிபட்டுள்ளனர்.
இதன் போது முதியவர்கள் இவர்களை மடக்கிப் பிடித்து வீட்டினுள் வைத்து விசாரணை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விசாரணைகளில் பிரபல பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் என தெரியவந்துள்ளது. அத்துடன் 3 பேரும் தடகள விளையாட்டு வீர,வீராங்கனைகள் என்பதுடன் மாணவன் குறித்த பாடசாலை ஒன்றில் தேசிய மட்டத்தில் விளையாட்டு ஒன்றில் தெரிவானவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.