Loading...
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யுவான் ஜியாஜுன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் எதிர்வரும் 19 முதல் 23 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
Loading...
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான யுவான் ஜியாஜுன், சீனாவின் சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
அவரது இலங்கை விஜயத்தின் போது, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Loading...