Loading...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
அதற்கமைய, மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் அதற்கு சமமான நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
Loading...