Loading...
இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை. இவருக்கு வயது 42. இவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடகத்துறையில் இருந்து கே.பாக்யராஜ் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி, தனது இயல்பான நடிபினால் ரசிகர்களை கவர்ந்து தனி முத்திரை பதித்தவர் சிட்டிபாபு என்ற தவக்களை.
Loading...
அவர் எதிர்பாராதவிதமாக காலமானதை அறிந்து மிகவும் வேதனையடைகிறோம். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், நடிகர் சமூகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்ப்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
Loading...