தற்போது சந்தைகளில் பச்சை, சிவப்பு என இரண்டுவகையான அப்பிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் அப்பிள்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கினை அளிக்கின்றன.
உடலுக்கு நன்மை பயக்கும் அப்பிள்
இந்த இருவேறுபட்ட அப்பிள்களில் உடலுக்கு நன்மை பயக்கும் அப்பிள் எது என்பதை அறிந்து கொள்ளலாம்
பச்சை, சிவப்பு இரண்டு அப்பிள்களிலும் புரதம், விட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
சிவப்பு அப்பிளை விட பச்சை அப்பிளில் சர்க்கரை குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை அப்பிள் சிறந்தது.
அண்டி அக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க சிவப்பு அப்பிள்கள் சிறப்பானவை. பச்சை அப்பிளில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி அஸ்துமா அபாயத்தை குறைக்கிறது.
பச்சை, சிவப்பு இரண்டு அப்பிள்களுமே செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கின்றன.
பச்சை அப்பிளில் சிவப்பு அப்பிளை விட கல்சியம் சத்து கூடுதலாக இருப்பதால் எலும்பிற்கு வலு அளிக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு புளிப்பு சுவை கொண்ட பச்சை அப்பிள் சிறந்தது.