Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபைத் தலைவரும் பேராசிரியருமான கார்லோ பொன்சேகாவை பார்வையிடுவதற்காகவே ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக, கார்லோ பொன்சேகா கொழும்பு தேசியமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
இந்த நிலையிலேயே அவரை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
இதயநோய் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரின் உடல் நிலை இயல்பாகவே உள்ளது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...