Loading...
இந்தியாவில் இளைஞர் ஒருவர் 20 ரூபாய் தர மறுத்த பெற்ற தாயை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜாவீத்தை பொலிசார் கைது செய்துள்ளனர். போதை பழக்கத்திற்கு அடிமையான ஜாவீத் தனது தாயிடம் பணம் வாங்கி சூதாட்டத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று போதையிலிருந்த ஜாவீத் தாயிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார்.
தாய் தர மறுக்க கோபமடைந்த ஜாவீத் கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ஜாவீத்தை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Loading...
Loading...