ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட மொத்தம் 7 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹானர் பிரான்டின் புதிய ஹானர் பேட் X9 மாடலுக்கான டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஹானர் டேப்லெட் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டீசரில் புதிய ஹானர் பேட் X9 வாங்குவோருக்கு ஹானர் ப்ளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1 ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஹானர் பேட் X9 மாடலில் 5MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீக்கர் டிசைன் வழங்கப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 7250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்தற்கு வீடியோ பிளேபேக் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 199.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 450 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.