உடுகம வைத்தியசாலையில் உயிரிழப்பதற்கு முன்னர் நான்கு பேரை வாழ வைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் நான்கு பேருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெறப்பட்டதாக உடுகம வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுசந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உடுகம வைத்தியசாலை வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரிடமிருந்து உறுப்புகள் சேகரிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
2/169, நயதொல, அலபலதெனியவில் வசிக்கும் எல்.பிரேமாவதி என்பவர் இந்த மாபெரும் தொண்டுக்காக தனது உடல் உறுப்புகளை வழங்கியுள்ளார். இதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உறுப்புகள் பிக்கு ஒருவர் உட்பட மூவருக்கு மாற்று சிகிச்சைக்காக தேசிய உறுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.
மூளைச்சாவு அடைந்த இந்த நோயாளி உறுப்புகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பிரேமாவதி சுகயீனம் காரணமாக மூளை நரம்பு வெடித்து இரத்தம் கசிந்ததால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மூளைச்சாவுடைந்துள்ளமையினால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த மிகப்பெரிய தியாகத்தை செய்த குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.