கொழும்பு – கிரிபத்கொட பகுதியில் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த கிரிபத்கொட பொலிஸார் முகாமையாளர்களுடன் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
மசாஜ் நிலையங்களில் ஒன்று கண்டி வீதியின் கலா சந்தியிலும் மற்றைய மசாஜ் நிலையம் மாகொல வீதி பகுதியிலும் சோதனையிடப்பட்டுள்ளது.
கலா சந்தியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களுடன் முகாமையாளர் ஒருவரும், மாகொல வீதி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் இரண்டு பெண்களுடன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, களனி மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வசிக்கும் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.