Loading...
காத்திருப்பு என்பது ஒரு வெற்றியாளனுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். அவசரப்பட்டாலோ அல்லது பொருமையை இழந்தாலோ இழப்பு ஏற்படப்போவது என்னவோ நமக்குத்தான் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் நடிகர் அருண் விஜய்.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் “குற்றம் 23” இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் அருண்விஜய் – குற்றம் 23 படத்தின் மூலமாக என்னுடைய சினிமா வாழ்க்கை மீண்டும் தொடங்கவிருக்கிறது. என்னுடைய நண்பன் இந்திரகுமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க இறங்கி வேலை செஞ்சதென்னவோ நான் தான். தரையை மட்டும்தான் நான் தொடலைக்கல மத்தபடி எல்லா வேலையும் செஞ்சாச்சு… இந்திரகுமார் எல்லா பொருப்புகளையும் என்னை நம்பி கொடுத்துவிட்டதால் தயாரிப்பு பணிகளையும் நானே சேர்த்து பார்த்துக் கொண்டேன்.
அதுமட்டுமல்ல ஒரு தயாரிப்பாளனாக இருக்கும்போது எவ்வளவு பொறுமை வேண்டும் என்பதையும் நான் கற்றுக் கொண்டேன். இதற்கு உதாரணமாக ஒருநாள் நாங்கள் பெரிய கட்டிடத்தின் பார்க்கிங்கில் ஒரு ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு பர்மிஷன் எல்லாமே வாங்கி அன்னைக்கு ஸ்பாட்டுக்கு போயிட்டோம். நான் கேரவேனில் இருந்தேன் டைம் ஆயிட்டே இருந்தது இன்னும் ஷாட் ரெடியாகலையான்னு கேரவேனிலிருந்து வெளியே வந்து என்னன்னு கேட்டேன். கொஞ்சம் பிரச்சனைன்னு சொன்னாங்க பர்மிஷன் வாங்கலைன்னு சொல்லி சிலர் வந்து பிரச்சனை செஞ்சிட்டு இருந்தாங்க. நாங்க வாங்கின பர்மிஷன் பில்டர்ஸ் என்றும் எங்ககிட்ட பிரச்சனை பண்ண வந்தவங்க அசோசியேஷன்னு ஆட்கள் என்றும் தெரியவந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் அன்னைக்கு மட்டும் செலவு செஞ்சிருக்கோம். இதனால ஷூட்டிங்கை நிறுத்த முடியாது என்பதால் பொறுமையாக பேசி அந்த விஷயத்தை சுமூகமாக முடித்து நாங்க படப்பிடிப்பை முடித்தோம், எனக்கான தடைகள் வரும்போது அதை நான் பாசிட்டிவாக பார்த்து கையாளுவதால் நான் ஒவ்வொரு படியாக மேலே ஏறிதான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார் அருண் விஜய்.
குற்றம் 23 படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடேசன் வாங்கியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் 23 படத்தின் பிரீமியர் காட்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள் படத்தை பார்த்துவிட்டு எங்களை பாராட்டினார்கள். படமும் அனைத்து ஏரியாவிலும் விநியோகம் ஆகிவிட்டது என்று கூறினார் பிரபு.
Loading...