கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
‘ரைட் டு லைப்’ மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்க மற்றும் ஒரு அதிகாரி ஆகியோர், இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
வன்முறை சம்பவங்கள்
காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு குழுவால் தாக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்த போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட பத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களை பிரதிவாதிகளாக மனுதாரர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர்.