ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவுகளுக்கு ரஷ்ய இராணுவம் அடிபணிய மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு இராணுவ தளபதிகளால் காட்டப்படும் கீழ்ப்படியாமை தற்போது இராணுவ வீரர்களிடமும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவன பரிசோதனை தளபதிகள் மத்தியில் உள்ள கீழ்ப்படியாமை அவர்களின் சில வீரர்களுக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டுகின்றது.
புடினுக்கு ஏற்பட்ட நெருக்கடி
இராணுவ தளபதிகள் மத்தியில் கீழ்ப்படியாமை அதிகரித்து வருவது ரஷ்ய இராணுவ தலைமையை இன்னும் வெளிப்படையாக எதிர்க்க மற்ற உயர்மட்ட அதிகாரிகளை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் போரில் ரஷ்ய படைகளுக்கு உதவிய தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றது. இதன்பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சியை கைவிட்டது. இதன் மூலம் புடினுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகியுள்ளது.
இந்த நிலையில் புடினின் உத்தரவுக்கு ரஷ்ய இராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.