அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அதிபர் செயலகம் அழைக்கப்பட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அதிபர் செயலகத்திற்கு அழைத்த ரணில், அதிபர் தேர்தலுக்காக செலவிடப்பட்ட வேண்டிய நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
தேர்தலுக்காக செலவிடப்பட வேண்டிய பணம்
எனவே அதிபர் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதியமைச்சுக்கு அறிக்கை அனுப்புமாறு பணிப்புரை விடுத்த அவர், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காக செலவிடப்பட வேண்டிய பணம் தொடர்பான உரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிபர் ரணிலுக்கு அறிவித்துள்ளது.